இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 05:38 pm
international-day-for-girl-child-2018

பெண் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு அனைத்து வகையான உரிமைகள் கிடைக்கும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக, ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு  கொண்டாடப்பட்டு வருகிறது

இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்தும், பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டும் நோக்கிலும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிசம்பர் 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதியை உலக அளவில் பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி ஆண்டுதோறும் பெண் குழந்தைகள் வளர்ச்சி தொடர்பான ஏதாவது பொருளை எடுத்துக்கொண்டு அந்தக் கருத்தை முன்னெடுக்கும் வகையில் அன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில்  “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது தான் இன்றைய சர்வதேச பெண்கள் தினத்தின் மையக்கருத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வருவது பெருமைப்படக்கூடிய ஒரு விஷயம் தான். அதே நேரத்தில் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம். 

எனவே பெண்களுக்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க தாய்மார்கள் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். 

நாட்டின் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் நியூஸ்டிஎம் ஆசிரியர் குழுவினர் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close