இந்திய தபேலா கலைஞரை கொண்டாடும் கூகுள் டூடுல்

  Newstm Desk   | Last Modified : 16 Oct, 2018 08:50 am
google-celebrates-birth-anniversary-of-lachhu-maharaj-with-a-doodle

புகழ் பெற்ற இந்திய தபேலா இசைக்கலைஞர் லச்சு மகாராஜின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் ஒரு டூடுலை வெளியிட்டுள்ளது. 

பதித்த நாராயண்சிங் (72) என்கிற லச்சு மகாராஜன் தபேலா இசையில் தனக்கென தனி முத்திரை படைத்தவர். இவர் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி வாரணாசியில் பிறந்தார். 

தபேலா வாசிப்பில் ஒன்றான பெனாரஸ் கரோனாவில் சிறந்து விளங்கிய லச்சு மகாராஜ், பல படங்களிலும் நடித்துள்ளார். லச்சு மகாராஜிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் இன்று இந்தி திரைப்பட உலகில் தபேலா கலைஞர்களாக உள்ளனர்.மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் அளிக்க முன் வந்த போது, இசை ரசிகர்கள் கொடுக்கும் கவுரவத்தை விட மிகப்பெரிய விருது வேறொன்றுமில்லை, எனவே பத்மஸ்ரீ விருது தேவையில்லை என்று கூறி வாங்க மறுத்தார் லச்சு மகாராஜ். 1957ம் ஆண்டு இயல் இசை நாடகத்துறையில் அதிகப்பட்ச விருதான சங்கீத நாடக அகாடமி விருதினை பெற்றார்.

தபேலா இசை வாசிப்பிற்கு மிகப்பெரும் பங்காற்றிய லச்சு மகாராஜ் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரது பிறந்த நாளான இன்று அதனை கொண்டாடும் வகையில் கூகுள் தேடுதள நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூகுளின் பிரதான வண்ணங்களில் லச்சு மகாராஜின் உருவம் வரையப்பட்டுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close