உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day)

  சுஜாதா   | Last Modified : 20 Oct, 2018 12:56 pm
world-osteoporosis-day

எலும்புப்புரை என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு  எலும்புப்புரை நோய் அதிகமாக ஏற்படுகிறது. உலக எலும்புப்புரை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது. எலும்புப்புரை நோயைத் தடுத்தல், கண்டறிதல், சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்காக இந்நாள் அர்ப்பணிக்கப் படுகிறது. 

பொதுவாக நாற்பது வயதிற்கு மேல்தான் முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என்று சொல்வார்கள். நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான். உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும். 

இதனிடையே எலும்பு திசு குறைவதால் ஏற்படும், ஆஸ்டியோபோரோசிஸ்(எலும்புப் புரை) நோயால் எலும்பு பலவீனமடைகிறது. எலும்பு முறிவு ஏற்படும் வரை நோய் வெளியே தெரியாது. சர்வதேச அளவில், மூன்று பெண்களில் ஒருவர், ஐந்து ஆண்களில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயதானவர்களை இந்த நோய் எளிதில் தாக்கும். கால்சியம், வைட்டமின் "டி' குறைபாடு,உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை, புகைபிடித்தல், அளவுக்கு அதிகமான மது, காபின் உட்கொள்ளுதல் உள்ளிட்டவை நோய் தாக்குதலுக்கு முக்கிய காரணம்

உங்களுக்கு எலும்புப்புரை இருப்பதை எப்படி அறிவது?

எலும்புப்புரை  நோய் இருந்தால் கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படும்:

·  முதுகுவலி

·   நாட்பட உயரம் குறைதல்

·   வளைந்த தோற்றம்

·    இடுப்பு அல்லது முதுகுத்தண்டு உடைதல்

 

உங்கள் எலும்பை ஆரோக்கியமாக வைக்கக் குறிப்புகள்:


·  சுண்ணாம்புச் சத்து, உயிர்ச்சத்து டி நிறைந்த பால், தயிர், கீரை போன்ற சமநிலை உணவை உட்கொள்ளவும்.

·  எலும்பு இழப்பைத் தடுக்கத் தொடர்ந்து  உடற்பயிற்சி செய்யவும்.

·  எலும்புகளை வலுவாக்கப் புகைப்பதைத் தவிர்க்கவும்.

·  அதிக மதுவைத் தவிர்த்தால் எலும்புப்புரையைத் தடுக்கலாம்.

·  யோகா, தியானம் போன்ற  மன அழுத்தம் நீக்கும் செயல்பாடுகளில் ஈடுபடவும்.

·  எடை, சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்து டி அளவுகளை கட்டுக்குள் வைக்கவும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close