சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் பிறந்த தினம் இன்று. 

  சுஜாதா   | Last Modified : 20 Oct, 2018 12:57 pm

guru-nanak-dev

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும் சீக்கிய மதத்தின் பத்து மனித குருக்களில் முதலாமவருமான குரு நானக் பிறந்த தினம் இன்று. 

l  1469 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி லஹோருக்கு அருகிலுள்ள ராய் போய் டி தல்வண்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அப்போது பாகிஸ்தான் என்ற நாடு இல்லை. இப்போது பிரிவினைக்குப்பிறகு இந்த ஊர், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. ஊர்ப் பெயரை மாற்றி நன்கன சாஹிப்  என்று வைத்திருக்கிறார்கள்.

l  குழந்தையாக இருந்த போதே இவருக்கு ஆன்மிக நாட்டம் இருந்தது. படிப்பில் நாட்டம் இல்லை. சிறு வயதில் தந்தை இவரை மாடு மேய்க்க அனுப்புவார். அவற்றை மேய விட்டுவிட்டு இவர் தியானத்தில் அமர்ந்துவிடுவார்.

l  ஒருமுறை, தியானம் செய்துகொண்டிருந்த இவர் மீது வெயில் படாமல் இருக்க கொடிய நச்சுப் பாம்பு படமெடுத்து குடைபோல நின்றிருந்ததை மக்கள் பார்த்து அதிசயித்தனர். இவர் சாதாரண பிள்ளை இல்லை என்று உணர்ந்தனர். பெற்றோரோ, ‘இவர் சாதாரண பிள்ளைகள்போல இல்லையே’ என்று வருந்தினர்.

l  1499-ல் திடீரென்று காணாமல் போனார். நதியில் மூழ்கிவிட்டதாக எண்ணினர். ஊரே கூடி நதியில் தேடியும் கிடைக்கவில்லை. மூன்றாவது நாளில், எதுவுமே நடக்காததுபோல திரும்பி வந்தார். அன்று முதல் ஆன்மிக செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்.

l  ‘புரிந்துகொள்ள முடியாத, உருவமற்ற, அழிவில்லாத, அனைத்து மதங்களிலும் குறிப்பிடப்படும் இறைவன் ஒருவரே. அவர் நம் எல்லோரிடமும் வாசம் செய்கிறார்’ என்ற செய்தியைப் பரப்பினார்.

l  சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மிக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கினார். நேர்மையாக வாழவேண்டும் என்றார். ‘குரு நானக்’ என அழைக்கப்பட்டார். சீக்கிய மதம் பிறந்தது.

l   பெரும்பாலும் நடந்தே சென்றார். சென்ற இடங்களில் எல்லாம் இறைச் செய்தியைப் பரப்பினார். இவரது போதனைகள் அடங்கிய ‘குரு கிரந்த் சாஹிப்’, சீக்கியர்களின் புனித நூலாகத் திகழ்கிறது. இவை குர்முகி என்ற மொழியில் பதிவு செய்யப்பட்டன.

l  இந்து - முஸ்லிம் பேதம் பாராட்டாதவர். இரண்டு பிரிவினரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற ஒப்புயர்வற்ற ஞானியாகத் திகழ்ந்த குரு நானக் 70 வயதில் (1539) இறைவனடி சேர்ந்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.