குழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூடுல்!

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 01:10 pm
google-doodle-celebrates-children-s-day

குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் அந்த நாளின் சிறப்பை நினைவூட்டும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுலை வெளியிடும். நாள் தோறும் பல சுவரஸ்யங்களுடன் வெளியிடப்படும் இந்த டூடுல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று  நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. 

இதற்கான போட்டி சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பையின் பிங்க்லா ராகுல் வெற்றிபப் பெற்றார். இந்தாண்டு க்கான தலைப்பாக “What inspires me?” கொடுக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி வெற்றி பெற்ற டூடுல் விண்வளியை மையமாக வைத்து வரையப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close