'இரும்புப் பெண்மணி', 'எமர்ஜென்சியின் கதாநாயகி' இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!

  முத்துமாரி   | Last Modified : 19 Nov, 2018 01:48 pm

indira-gandhi-birthday-special

இந்தியாவில் தனிப்பெரும் சாதனை படைத்த பெண்மணிகளில் முக்கியமானவர் இந்திரா காந்தி. இவர் செய்த சாதனைகள் மற்றும் எடுத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் 'இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்பட்டார். இந்தியாவை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர். இன்று இவரது 101வது பிறந்தநாள்!

►  1917ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பெருமைமிக்க குடும்பத்தில் ஜவஹர்லால் நேரு - கமலா நேருவின் மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்ஷினி நேரு.

►  சுவிட்சர்லாந்து, ஜெனிவா ஆகிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றார். கொலம்பியா பல்கலைகழகத்தில் உயர்நிலை பட்டம் (சைடேஷன் ஆப் டிஸ்டிங்கஷன்) பெற்றார்.

►  இளமை காலத்தில் இருந்தே இந்திரா காந்தி சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபத்திக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு உதவும் வகையில், தனது சிறு வயதிலேயே சர்க்கா சங்கத்தையும் 1930ல் வானர் சேனாவையும் நிறுவினார். 1942 செப்டம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியின் வழிகாட்டுதலில் டெல்லியில் 1947ல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர் பணியாற்றினார்.

►  1942ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி தனது காதலரான பெரோஸ் காந்தியை மணந்தார். தொடர்ந்து 1955ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கமிட்டியில் உறுப்பினரானார். அதே ஆண்டில் கட்சியின் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1958ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மத்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அனைத்திந்திய காங்கிரஸ் குழு தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார். 1956ல் அனைத்திந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் பெண்கள் துறையின் தலைவராக இருந்தார். 1959 முதல் 1960 வரை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக அவர் பணியாற்றினார். 

►  1964ல் நேரு இறந்தபிறகு, அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பணியாற்றினார். பின்னர் சாஸ்திரியின் வற்புறுத்தலின் பேரில், மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார். 1964 முதல் 1966 வரை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

►  1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரை இந்தியாவின் மிகஉயரிய பதவியான பிரதமர் பொறுப்பை ஏற்றார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெற்றார். அதே நேரத்தில் மத்திய அணுசக்தி துறையின் அமைச்சராகவும் இருந்தார். 

►  இவா் பிரதமராக பொறுப்பேற்க 'மொரா்ஜி தேசாய்' உட்பட பல தலைவா்கள் எதிர்ப்பு தொிவித்தனா்.ஆனால் அவா்களை எல்லாம் கடந்து காமராஜாின் உதவி மூலம் பிரதமராக அமா்ந்தார். 

►  மேலும், 1967-69 மத்திய வெளியுறவுத்துறை  அமைச்சராகவும் 1970-73 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், 1972 -77 வரை மத்திய விண்வெளித்துறை அமைச்சராக இருந்தார். 1980ம் ஆண்டு மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது மத்திய திட்டக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.

►  அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர், வர்த்தக கொள்கை, அணு ஆயுதக்கொள்கை என அவரது செயல்திறன் உலக நாடுகளால் பாராட்டப்பட்டன. அதுவும் 1975-77 கால கட்டத்தில் எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டது. பல்வேறு பொருளாதார மற்றும் உள்நாட்டு கட்டமைப்புகளில் அவா் சீா்திருத்தத்தை மேற்கொண்டாா்.

►  அவாின் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் 'சீக்கிய தீவிரவாதம்' வளரத் தொடங்கியது.அதனை ஒடுக்கும் வகையில் சீக்கியா்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் 1984ம் ஆண்டு ஆப்ரேஷன் புளுஸ்டாா் என்ற பெயாில் ராணுவத்தை ஆயுதங்களுடன் அக்கோவிலுக்குள் செலுத்தினாா்,இச்செயல் பெரும் கண்டணத்துக்கு உள்ளானது.இதன்மூலம் சீக்கியா்களின் கோபத்துக்கு ஆளானார். 

►  1972ல் பாரத் ரத்னா, 1972ல் வங்காள தேசத்தின் விடுதலைக்காக மெக்ஸிகன் கழகத்தின் விடுதலைக்கான விருது, ஜ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 2-வது ஆண்டு விருது, 1976ல் நகரி பிரச்சாரினி சபையின் சாகித்தய வச்சாஸ்பதி (ஹிந்தி) ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

►  1953ம் ஆண்டு அமெரிக்காவின் தாய்மை விருது (மதர்ஸ் அவார்ட்) செயல்திறனில் சிறந்து விளங்கியதற்காக இத்தாலியின் இஸபெல்லா தி’ எஸ்தே விருது மற்றும் யேல் பல்கலைகழகத்தின் ஹாவ்லண்ட் நினைவு பரிசையும் அவர் வென்றுள்ளார். 

►  தி இயர்ஸ் ஆப் ச்லேஞ் (சவால்கள் நிறைந்த ஆண்டுகள்), (1966-69), தி இயர்ஸ் ஆப் எண்டேவர்ஸ் (முயற்சிகள் நிறைந்த ஆண்டுகள், 1969-72), 1975ல் இந்தியா (லண்டன்), 1979ல் ‘இந்தியா’ (லாஸேன்) போன்ற பல்வேறு உரைகளும், எழுத்துகளும் அவரின் பிரபலமான புத்தக வெளியீடுகளாகும்.

►  இறுதியில் 1984ம் ஆண்டு அக்டோபா் 31ம் தேதி புது டெல்லியில் உள்ள அவாின் இல்லத்தில் நிருபர்களின் சந்திப்புக்காக  வந்தார். அந்த சமயத்தில் அவரின் மெய்காப்பாளராக இருந்த சீக்கியா் இனத்தை சோ்ந்த சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங் என்பவா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். பொற்கோவிலில் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் பொருட்டு அவர்கள் இந்திராவை சுட்டுள்ளனர் என பின்னர் தெரிய வந்தது. 

►  இந்தியாவில் தனது சாதுரியாத்தாலும், செயல்திறனாலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்த இந்திரா தற்போதும் அனைத்து பெண்மணிகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவே திகழ்கிறார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.