இந்திரா காந்தியின் கடைசி திக் திக் நிமிடங்கள்!

  முத்துமாரி   | Last Modified : 19 Nov, 2018 01:47 pm
indira-gandhi-s-last-minutes-special-article

இந்தியாவின் முதல் பெண் பிரதமர், இந்தியாவின் இரும்புப்பெண்மணி, உலக நாடுகளை தனது சர்வாதிகாரத்தால் அச்சுறுத்தியவர், யாருக்கும் பயமின்றி இந்தியாவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர். தனது சாதுரியம் மற்றும் திறமையால் பல பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என பல்வேறு பெருமைகளை பெற்ற இந்திரா காந்தியின் 101வது பிறந்தநாள் இன்று! 

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி, முதலாவதாக 1966-67 காலகட்டத்தில் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 1967-71 மற்றும் 1971-77 என தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். மூன்றவதாக 1980ம் ஆண்டு பிரதமர் பொறுப்பை ஏற்றார். 

4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்த அவர் அன்று தான் இந்த உலகை விட்டு போகப்போகிறார் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.  1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 நாள் இரவு அவருக்கு சரியாக தூக்கம் வரவில்லை. சிறிது நடமாடிவிட்டு மீண்டும் படுத்துறங்கச் சென்றார்.  

மறுநாள் அக்டோபர் 31ம் தேதி காலை வழக்கம்போல் அலுவலக பணிகளுக்காக கிளம்பிவிட்டார். இன்று ஏதோ நடக்கப்போகிறது என அவர் மனதில் ஏதோ உதித்தது. ஆனால் அவ்வளவு சீக்கிரம் அந்த நிகழ்வு நடைபெறும் என்று அவருக்கு தெரியவில்லை. காலை 09:20 மணியளவில், அயர்லாந்து நாட்டுத் தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்த பிரித்தானிய நடிகர் பீட்டர் உஸ்தொனோவிற்குப் பேட்டியளிப்பதற்காக, புதுடெல்லி சப்தர்ஜங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். வழக்கம்போல் அவரது பிரியமான காவலர் பீண்ட் சிங், நாராயண் சிங் உள்ளிட்டோர் அவருடன் சென்றனர். 

அவர் வாயிலை கடந்த சிறிது நேரத்தில் தோட்டத்தில் மறைந்திருந்த சத்வந்த் சிங் தனது துப்பாக்கியால் 5 தோட்டாக்களை இந்திரா காந்தி நோக்கி விட்டார். அவை ஐந்திரகாந்தியின் வயிற்றை கிழித்தது. தொடர்ந்து அருகில் இருந்த பீண்ட் சிங், இந்திரா காந்தியை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தர். 25 தோட்டாக்கள் அவர் உடலில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் கண நேரத்தில் நடந்தது. இந்திராவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலர்களே அவரை சுட்டுக்கொல்வார்கள் என அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். 

பின்னர் மற்ற காவல் அதிகரிகள்ல பீண்ட் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்வந்த் சிங் சுடப்பட்டு காயமுற்ற நிலையில் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் 1989 இல் சத்வந்த் சிங்கும் உடன்குற்றவாளியான கெகர் சிங்கும் தூக்கிலிடப்பட்டனர். 

உடனே துப்பாக்கி சத்தம் கேட்டு சோனியா காந்தி வெளியே வந்தார். இந்திராவை தன் மடியில் கிடத்தி கதறி அழுதார். பின்னர் ஒரு காவலர் கார் கொண்டுவருமாறு உத்தரவிட, அவசரமாக இந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் நேரத்தில் அவர் உடலில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டே இருந்தது. சோனியாவின் சேலையெல்லாம் ரத்தத்தில் நனைந்தது. 

பிரதமர் அந்த நிலையில் வருவார் என்று எதிர்பார்த்திராத மருத்துவர்கள் அதுவரை எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. எனவே அவர் வந்ததும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து விட்டது. செயற்கை சுவாசம் கொடுத்து மருத்துவர்கள் காப்பாற்ற போராடினர். இறுதியில் மதியம் 2.20 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

அவர் உடலில் இருந்து 29 குண்டுகள் எடுக்கப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சில அறிக்கைகளில் 31 குண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் பல மணி நேரங்களுக்கு அவர் இறந்தது குறித்து அறிவிக்கப்படவில்லை. மாலை 6 மணிக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் , அகில இந்திய வானொலியிலும் அவரின் இறப்பு செய்தி அறிவிக்கப்பட்டது. உடன் இருந்த பாதுகாவலர்களே சுட்டுக்கொல்லப்பட்டு இறந்த இந்திராவை நினைத்து பலர் கதறியழுதனர். ஒரு மாபெரும் சகாப்தம் அன்று முடிவுக்கு வந்தது.

'காலிஸ்தான்' என்ற தனிநாடு கோரிய சீக்கிய அமைப்புகளை ஒடுக்க வேறு வழியில்லாமல் 1984ம் ஆண்டு ஜூன் மாதம் சீக்கியர்களின் முக்கிய கோயிலான பொற்கோயிலை இந்திய இராணுவத்தினர் தாக்கிய புளூ ஸ்டார் நடவடிக்கையால் பொற்கோயில் பெரிதும் சேதமடைந்தது. இந்திராவின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாகவே திட்டமிட்டு இந்த சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது பின்னர்  தெரிய வந்தது. 

இன்று வரை இந்திய அரசியலில் அவர் இடத்தை நிரப்பும் வடிவில், ஒரு அசாத்திய ஆளுமையுடன் யாரும் வரவில்லை என்றே கருதப்படுகிறது. இந்திய வரலாற்றில் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த ஒரே பெண்மணி இந்திரா காந்தி தான். அதேபோன்று நிதியமைச்சராக பதவி வகித்த ஒரே பெண் என்ற பெருமையையும் இந்திரா காந்தி பெற்றுள்ளார். அவரது இந்த சாதனைகள் இதுவரையிலும் முறியடிக்கப்படவில்லை. இதன்மூலம், வரலாற்றிலேயே இந்தியாவின் இரும்புபெண்மணி என்றாலே இந்திராகாந்தி தான்.  அப்படித்தானே? 

இந்தியாவின் 'இரும்புப் பெண்மணி' இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close