இந்தியாவை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாள் இன்று!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 01:20 pm
indian-constitution-day

நவம்பர் 26ம் தேதியான இன்று தேசிய அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய மக்களின் பாதுகாப்பிற்காகவும், நாட்டை செம்மையாக வழிநடத்தவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.  சட்டமேதை அம்பேத்கர் தலைமையிலான குழு இதனை உருவாக்கியது. 

பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பு குறித்து ஆராய்ந்து, நமது இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.  நம் நாட்டின் அரசியலமைப்பு உலகிலேயே மிக நீண்ட அரசியலமைப்பாகும்.  இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் உள்ளன. தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்களும் கெற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாள். 1949 நவம்பர் 26. 1947ம் ஆண்டு இதற்கான பணி தொடங்கப்பட்ட நிலையில், இதனை உருவாக்க 2 வருடங்கள், 11 மாதங்கள், 17 நாட்கள் ஆகியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஜனவரி 26. 

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதனை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் பொருட்டும் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியை தேசிய அரசியலமைப்பு தினமாக மத்திய அரசு அறிவித்தது. இந்நாள் தேசிய சட்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close