ஆளி விதையில் (Flex Seeds) கிடைக்கும் நன்மைகள்

  mayuran   | Last Modified : 19 Oct, 2016 09:08 pm
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் டயட்டில் இருக்கும் போது, இந்த ஆளி விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலின் கெட்டக் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு பின் வெந்நீர் குடித்துவர, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகிவிடும். பிரசவித்த பெண்கள் ஆளி விதையை பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், தாய்ப் பால் அதிகம் சுரக்கும். ஒரு தேக்கரண்டி ஆளிவிதை பொடியில், ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் வலுவடைந்து, ஆண்மை சக்தி அதிகரிக்கச் செய்யும். ஓமம், வெந்தயம், கருஞ்சீரகம் மற்றும் ஆளிவிதை பொடி ஆகியவற்றை சமமாக கலந்து, தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகள் காணாமல் போய்விடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close