பரு தழும்புகளை நீக்கும் வழிகள்- பாகம் 1

  varun   | Last Modified : 21 Oct, 2016 02:34 pm

பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதால் பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஏழே நாட்களில் மறையச் செய்யலாம். * 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 7-8 துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் துடைத்து, பின் இந்த க்ரீம்மை தடவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் படுக்கும் முன் பயன்படுத்தி வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் விரைவில் மறையும். * சருமத்தில் உள்ள தழும்புகளை வைட்டமின் சி நிறைந்த பொருட்கள் எளிதில் மறையச் செய்யும். அதற்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, தினமும் இரவில் படுக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் பொடியில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.