அவகோடா பழத்தின் மகிமைகள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகோடா பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. * வறண்ட சருமத்தினருக்கு இப்பழம் ஒரு வரப் பிரசாதம் என்பதாலேயே அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது. * சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினைகளை தீர்க்க இந்த பழத்தை நாம் சாப்பிடலாம். * மேலும் இவை உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது. செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது. கெட்ட கொழுப்பை குறைப்பதால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. * இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய் தாக்குதல்களில் இருந்து காக்கிறது. * அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. * கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை இப்பழத்தை சாப்பிடுவதால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close