பரு தழும்புகளை நீக்கும் வழிகள்- பாகம் 2

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம்மில் பலருக்கு முகத்தில் தோன்றும் பருக்களை பிய்க்காமல் தூக்கம் வராது. அவ்வாறு செய்வதால் பருக்கள் முகம் முழுவதும் பரவுவதுடன், பரு தோன்றிய இடத்தில் பெரிய தழும்புகளையும் ஏற்படுத்துகிறது. அதனை போக்கும் இயற்கை வழிகளின் தொடர்ச்சி இங்கே: * ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் க்ரீன் டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தினமும் செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் மறைந்திருப்பதைக் காணலாம். * ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முதலில் முகத்தை ஈரமான துணியால் துடைத்துவிட்டு, பின் இக்கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் மீண்டும் அதன் மேல் தடவி உலர வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். * 2 டேபிள் ஸ்பூன் புதினா பேஸ்ட்டை, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து, அதோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் 2 முறை அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுவதால் தழும்புகளைப் போக்கலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close