தீபாவளி ஸ்பெஷல்: தீக்காயங்களும் சிகிச்சை முறைகளும்

  varun   | Last Modified : 27 Oct, 2016 09:07 pm
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும், சில சமயங்களில் தீக்காயங்கள் தீபாவளி பண்டிகையில் தவிர்க்க முடியாதவையாக அமைந்து விடுகின்றன. அவற்றிற்கான எளிய சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்... * தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், சுமார் 10-15 நிமிடங்கள் குளிர்ந்த நீரையோ பாலையோ பட வைக்க வேண்டும். வலி குறையும் வரை, சில மணி நேரங்களுக்கு ஒருமுறை இச்சிகிச்சையை மீண்டும் மீண்டும் தரலாம். * சிறிய தீக்காயமாயின், தீப்புண்ணின் மீது உருளைக்கிழங்கை மெல்ல, அதன் சாறு காயத்தின் மீது ஒழுகும் வரை தேய்க்கலாம். * தீக்காயத்தின் மீது கற்றாழை சாறையும் தடவலாம். இதனால் சில மணி நேரங்களில் வலி நிவாரணம் பெறலாம். * தீயினால் பாதிப்பு ஏற்பட்ட உடன், தீப்புண்ணின் மீது தேங்காய் எண்ணையை தடவ வேண்டும். தேங்காய் எண்ணையில் உள்ள வைட்டமின் 'E' மற்றும் பல்வேறு அமிலங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைத் தடுக்கும். * காயம் ஏற்பட்ட இடத்தில், பால் மற்றும் மஞ்சள் கலந்த கலவையை தடவினால் வலியும், வீக்கமும் குறையும். ஏனெனில் மஞ்சளில் உள்ள 'Curcuminoids' உடல் வீக்கங்களை ஆற்றும் வல்லமை படைத்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close