தூங்க செல்லும் முன் செய்யக் கூடாதவை

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
* இரவுகளில் பயமூட்டும் த்ரில்லர், ஆக்‌ஷன் படங்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தூக்கத்தைக் கெடுக்கும். * தூங்குவதற்கு முன் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் தொடர்பானவற்றை படிக்க வேண்டாம். ஏனெனில் அவை சிந்தனையைத் தூண்டுவதால் மூளை சுறுசுறுப்பாக்கி தூக்கத்தை பாதிக்கும். * தூங்கச் செல்வதற்கு 1 மணி நேரத்துக்கு முன் உடற்பயிற்சி செய்யாதீர்கள். அதே போல் தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் 1 மணி நேரத்துக்கு முன் டீ, காபி, மது போன்றவற்றை குடிக்கக் கூடாது. * நனைந்த மற்றும் இறுக்கமான உள்ளாடைகளுடன் அவசியம் தூங்கச் செல்லக் கூடாது. * இரவுகளில் எளிதில் செரிக்காத தயிர், முட்டை, மாமிசம், எண்ணெயில் பொரித்த சிப்ஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகள் மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். * நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டால், இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்கவேண்டிய வேலைகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடாதீர்கள். * மதியம் மற்றும் மாலை நேரத்தில் தூங்குவதும் இரவு நேர தூக்கத்தை பாதிக்கும். * படுக்கையறையைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். படுக்கையில் உட்கார்ந்து அலுவலக வேலைகளைச் செய்வதோ, டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடவே கூடாது. மேலும் இரவில், படுத்தவாறே குறைந்த வெளிச்சத்தில் மொபைல், ஐபேட் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close