கை, கால் உறுப்புக்களை செயலிழக்க செய்யும் Paralysis என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் எழுந்து நடக்கும் வைக்கும் வகையில் Jocelyne Bloch என்ற விஞ்ஞானி ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த அபாரமான கருவியை முதலில் Paralysis நோய் தாக்கிய இரண்டு குரங்குகளுக்கு பொருத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து இரண்டு குரங்குகளும் சாதாரணமாக எழுந்து நடக்க தொடங்கியுள்ளன. இதன் மூலம் இக்கண்டுபிடிப்பு வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. அடுத்ததாக மனிதர்களுக்கு இது சாத்தியப்பட்டால் Paralysis நோயை அடியோடு ஒழிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.