உடல் நலனுக்கு உகந்த உணவுகள் - பாகம் 2

  varun   | Last Modified : 11 Nov, 2016 11:36 am
நோயின்றி வாழ நாம் செய்ய வேண்டியது, உடலில் உள்ள உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் எந்தெந்த காய்கறிகளில் இருந்து கிடைக்கிறது என்று தெரிவு செய்து சாப்பிட வேண்டும். அத்தகைய உணவு பொருட்கள் குறித்த முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி இங்கே... * வாழைப்பழம், பப்பாளி, மோர், ஆப்பிள், பட்டை வெங்காயத்தாள், இஞ்சி போன்றவை வயிற்றுக்கான உணவுகள் ஆகும். சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. * அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், 50 மி.லி அளவு இஞ்சி, சீரகம் போன்ற குர்குமின் சத்துக்கள் உள்ள உணவுகளைக்கொண்டு டீ தயாரித்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். * தக்காளி, மாதுளை, பப்பாளி, கொய்யா, தர்பூசணி மற்றும் நல்லெண்ணெய் போன்றவை இதயத்திற்கு உகந்த உணவுகளாகும்.தக்காளியில் உள்ள லைக்கோபீன் என்ற நிறமி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது. கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் அடைப்புகள் ஏற்படாது. * லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக்கொண்டவர்களின் இதயம் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close