குளிர்கால நோய்களுக்கு வீட்டு வைத்தியம்

  jerome   | Last Modified : 12 Nov, 2016 02:54 pm

குளிர்காலங்களில் உண்டாகும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு வீட்டிலேயே எளிய மருந்துகளை தயாரிக்கலாம். ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதே அளவு சீரகத்தையும் சேர்த்து இரண்டையும் நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் கனமாக தடவி அதை தொடர்ந்து முகர்ந்து பார்த்து வந்தால் ஜலதோஷம் குறையும். முருங்கப்பட்டையை அவித்து சாறு எடுத்து அதை ரசமாக்கி குடித்து வந்தால் குளிர் காய்ச்சல் குறையும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டி, அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பதமாக காய்ச்சி மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close