வயிற்றுப்புண்ணை (அல்சர்) போக்க எளிய வழிகள்!!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணை நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை கொண்டு எளிதாக குணமாக்கும் வழிகளை கீழே பார்க்கலாம்:- * போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவது வயிற்றுக்கு ஏற்றது. காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிக்கலாம். அகத்திக்கீரை உண்டு வந்தால் வயிற்றுப்புண் குணமடையும். * வயிற்றுவலி, வயிற்று எரிச்சலைக் குறைக்க குளிர்ந்த பால் குடித்து வரலாம். நெல்லிக்காய் சாற்றை பணங்கற்கண்டு உடன் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வில்வ இலைகள் மற்றும் பழங்கள் எடுத்துக் கொண்டு வருவதனால் எரிச்சல் குறையும். * அதிகமான அமிலத்தை சரிபடுத்தக் கூடிய வாழைப் பழத்தை, பாலுடன் 2,3 வாழைப் பழங்களுடன் சேர்த்து உட்கொண்டால் நன்மை தரும். அதிலும், பச்சை வாழைப் பழங்கள் வயிற்றுப்புண்ணை குணமாக்க அருமருந்தாக திகழ்கிறது. * மேலும், வயிற்றுப்புண் இருப்பவர்கள், புளிப்புச்சுவை உள்ள திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அண்ணாச்சி, போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close