முகத்தில் எண்ணெய் வடியும் ஆண்களுக்கு 2 பேஸ் பாக்

  mayuran   | Last Modified : 29 Nov, 2016 09:37 pm
ஆண்களின் எண்ணெய் வடியும் முகத்திற்குத் தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தைத் தோல் நீக்கி அதனைப் பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு தடவவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் 'பளிச்' என்று ஆகும். அதே போல் வேப்பிலையும் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மையாக அரைத்து அதனுடன் சில துளி பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்தக் கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும் கரும்புள்ளிகள் நீங்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close