கார்டியாக் அரெஸ்ட் என்பது மாரடைப்பு அல்ல

  shriram   | Last Modified : 05 Dec, 2016 02:47 pm

மாரடைப்பு என்பதும் கார்டியாக் அரெஸ்ட் என்பதும் பொதுவாக ஒரே மாதிரியான அர்த்தத்தில் நம்மால் சொல்லப்படுகின்றன. ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல. முதல்வருக்கு மாரடைப்பு என்று தவறாக கூறப்படுகிறது. மாரடைப்பு என்பது என்ன: இதயத்தில் உள்ள தமனி (Artery), ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இதயத்திற்குப் போக விடாமல் தடுப்பது தான் மாரடைப்பு அல்லது ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தமனியை மருத்துவ உதவியுடன் திறந்து விட்டால் மாரடைப்பில் இருந்து விடுபடலாம். கார்டியாக் அரெஸ்ட்: கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் இரத்த ஓட்ட நிறுத்தம், எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் இதயத்தில் இரத்த ஓட்டத்தில் நிறுத்தம் ஏற்படுவதால் இதயம் வழக்கத்திற்கு மாறாகத் துடிக்க ஆரம்பித்து விடும். துடிப்பில் மாற்றம் ஏற்படும் போது இதயத்தில் இருந்து மூளை, நுரையீரல் ஆகிய உடலின் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் செலுத்தப்படாமல் போய்விடும். இப்படி எதிர்பாராமல் உடல் உறுப்புகள் அனைத்தும் இரத்த ஓட்டத்தில் மாற்றத்தைச் சந்திக்கும் போது – கார்டியாக் அரெஸ்ட்டால் பாதிக்கப்பட்டவர் சுய நினைவை இழப்பது, நாடித்துடிப்பு நிற்பது போன்ற மாற்றங்கள் நடக்கத் தொடங்கும். ஆகவே முதல்வருக்கு வந்தது மாரடைப்பு அல்ல , இதய நிறுத்தம். இதை சரி செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இது பற்றி தனது சொந்த அனுபவத்தை கூறிய அன்பழகன்(40) என்ற பொறியாளர் தான் 3 முறை கார்டியாக் அரெஸ்ட்டால் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் தான் நன்றாக உடல் நலம் தேறி தற்போது 16 ஆயிரம் அடி உயரமுள்ள இமய மலை அருகில் உள்ள கைலாச மலைக்கு சென்று வந்ததாக கூறுகிறார். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட முடியாது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close