நரம்புகளை வலுப்படுத்த உதவும் அசைவ உணவுகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்தான உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை எனில் "பெர்னிஷியஸ் அனீமியா" எனும் ரத்தத்தையும், நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி-12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி இறுதியில் நரம்புத்தளர்ச்சியை ஏற்படுத்திவிடும். வைட்டமின் பி-12, இறைச்சியில் அதிகம் காணப்படுகின்றது. அதிலும் கோழியின் ஈரலில் நம் உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் இருக்கின்றது. காய்கறிகள், கீரைகளில் காணப்படுவதை விட முட்டை மற்றும் பால் பொருட்களில் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close