சர்க்கரை நோயினால் கண் பாதிப்பு வரும், தெரியுமா?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம் நாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 63% பேருக்கு சர்க்கரை நோயால் கண் பாதிப்பு ஏற்படும் என்கிற விஷயமே தெரியாது, என சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 6000 சர்க்கரை நோயாளிகளை வைத்து நடத்திய இந்த சோதனையில், 63% பேருக்கு கருவிழி பாதிப்பு இருந்ததாகவும், அவர்கள் சர்க்கரை நோயால் கண் பாதிக்கும், என்ற விஷயமே அறியாமல் இருந்தனர் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 92% நோயாளிகள், கண் பார்வைக் கோளாறு ஏற்படும் போது தான், அதை சரி செய்ய மருத்துவரை அணுகுகிறார்களாம். சர்க்கரை நோயாளிகள் முன்கூட்டியே மருத்துவரை அணுகி, கண்ணை சோதனையிட்டால் 'டையாபெட்டிக் ரெட்டினோபதி' என்ற இந்த கருவிழி பாதிப்பை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும், என்கிறார்கள். சர்க்கரை நோயுடன், புகைப்பழக்கம் உள்ள 52% ஆண்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரிக்க, இந்த கருவிழி கோளாறு ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும், என்று கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close