அம்மையாரை தொடர்ந்து கருணாநிதிக்கும் தரப்பட்ட Tracheostomy??

  shriram   | Last Modified : 22 Dec, 2016 02:59 am
'ட்ரெகியோஸ்டோமி' என்ற சொல்லை சில உயர் ரக மருத்துவமனை வாயிலாக தமிழக மக்கள் கேட்டுள்ளனர். ஆம், மறைந்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் இதே சிகிச்சை செய்துள்ளதாக சொல்லுகிறார்கள். எம்.ஜி.ஆரோடு சேர்த்து இதுவரை மூன்று முதல்வர்களுக்கும், பல சினிமா பிரபலங்களுக்கும் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 'ட்ரெகியோஸ்டோமி' என்றால் என்ன? எப்படி செய்கிறார்கள் ? ட்ரெகியோஸ்டோமி என்பது ஒரு அறுவைசிகிச்சை முறையாகும். மூச்சுக்குழலில், நுரையீரலில், தொற்று ஏற்படும்போது, சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய, தொண்டைக்குக் கீழ்புறக் கழுத்துப் பகுதியில் துளையிட்டு ஒரு செயற்கைக் குழாய் மூலம் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜனை உள் செலுத்துவர். இந்த டியூப் உள் மற்றும் வெளிப் புறமும் இருக்கும். முற்றிலுமாகக் குணமடைந்த பிறகே மூச்சுக்குழலுடன் இணைக்கப்பட்ட இந்த செயற்கைக் குழாய் வெளியே எடுக்கப்படும். இந்த சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் குழாய்க்கு 'ட்ராக் டியூப்' அல்லது 'ட்ரெகியோஸ்டோமி டியூஃப்' (Trach Tube or Tracheostomy Tube) என்று பெயர். எவ்வாறு இது உருவாகிறது ? யாரையெல்லாம் இது தாக்குகிறது? இது போன்ற சுவாசக்கோளாறு பிரச்னை, ஒவ்வாமையின் காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக, ஒவ்வாமையானது தோல் மற்றும் நுரையீரலைப் பாதிக்கும். சிலருக்கு, அலர்ஜி, வீக்கம், ஒவ்வாமை போன்றவற்றுக்கான இம்யூனோமாடுலேட்டர் மருந்துகளை எடுத்துக்கொள்வதாலும் சுவாசக்கோளாறு ஏற்படும். இந்த மருந்துகள், நம்மை மிகவும் சுறுசுறுப்பாகவும், முதுமையின்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. மேலும், புற்றுநோய் சிகிச்சைகளில் உடலுக்குப் புத்துணர்வு அளிப்பதற்காகவும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போரிடுவதற்காகவும் இம்யூனோமாடுலேட்டர் மருந்துகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவற்றின் விலை சற்று அதிகம் என்பதால் ஒரு சில பிரபலங்களே இதை எடுத்துக்கொள்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close