எபோலாவுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆப்பிரிக்க கண்டத்தையே உலுக்கி எடுத்த எபோலா வைரஸை எதிர்த்து போராடும் மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக WHO (World Health Organisation) தெரிவித்துள்ளது. 11,000 அப்பாவி மக்களின் உயிரை பலி கொண்டு, சமீப காலத்திலேயே மிகவும் மோசமான வைரஸாக கருதப்பட்ட எபோலாவை தடுக்கும் முதல் மருந்து இது தான். இறுதி கட்ட சோதனையையும் வெற்றியடைந்து விட்ட நிலையில் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த வெற்றி எபோலாவால் பலர் உயிரிழந்தபிறகு வந்தாலும், அடுத்து எபோலா வைரஸ் பரவினால் நாம் தகுந்த மருந்துடன் ரெடியாக இருப்போம்," என WHO தெரிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close