பூண்டு தரும் நன்மைகள்....

  நந்தினி   | Last Modified : 04 Jan, 2017 10:09 pm
ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் பூண்டில் உள்ளன. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணம். பூண்டை சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும். ஆறு பூண்டுகளை வறுத்துச் சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் சில நன்மைகளை கீழே பார்க்கலாம்:- -> சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், பூண்டு செரிமானமாகிவிடும். அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ- ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும். மேலும், ஒரு மணி நேரத்தில், பூண்டின் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்ளும், இது சிறந்த பாதுகாப்பாக செயல்படும். -> அடுத்த இரண்டு மணி நேரத்தில், உடலின் வளர்சிதை மாற்றம் தூண்டப்படும்; தேவையில்லாத நீர், கொழுப்பு குறையும். -> ஆறு முதல் ஏழு மணி நேரம் தாண்டியவுடன், பூண்டு ரத்த நாளங்களில் நுழைந்து, பாக்டீரியாக்களை எதிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும். -> இதன்பிறகு, பூண்டின் பெரிய பலன்கள் தெரியத் தொடங்கும். இதயம் சார்ந்த பல பிரச்னைகளைப் பூண்டு குணப்படுத்தி உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்புச்சக்தியைத் தரும்; எலும்புகளை வலுவாக்கி, சோர்வைப் போக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close