விழிகளை கவர்ச்சியாக்குவோம் வாங்க...

  mayuran   | Last Modified : 06 Jan, 2017 09:24 pm
சிம்பிள் அண்ட் பெஸ்ட்... கண்களில் உள்ள கவர்ச்சியை, கவிதைகளிலும், கட்டுரைகளிலும் பாடாத கவிஞர் இல்லை...அந்த கண்களை அழகுபடுத்த சில டிப்ஸ் பார்க்கலாம்... * பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் மஸ்காரா கொஞ்சம் தூக்கலா ஆகிடுச்சுன்னா, லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம். * கண்களுக்கு போடும் ஐ-லைனர், பென்சிலாக இருப்பது சிறந்தது. திரவமாக இருந்தால், அவை பின்பு கலைந்து அழகை கெடுத்துவிடும். மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர், பிரவுன் அல்லது காபி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால், இமைகளுக்கு மேல் போடப்பட்டுள்ள ஐ-லைனர், சற்று அழகாக வெளிப்படும். * லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோவை பயன்படுத்துவதுங்கள். முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் அணியும் உடைக்கு ஏற்றவாறு ஐ-ஷேடோவை பயன்படுத்தினால், அது கண்களுக்கு மேலும் மெருகூட்டும். கொசுருதகவல் கிறிஸ்டின் ஸ்டீவர்ட் போன்று நல்ல கிளாமரான லுக் வேணும்னா, சிறந்த ஐ மேக்கப்புடன் உதட்டுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் லிப் கிளாஸ் போட்டால், அது பார்ட்டிகளுக்கு செல்லும்போது எடுப்பாக இருக்கும். பிரவுன் நிற லிப்ஸ்டிக் பயன்படுத்துவது உதட்டின் நிறத்துக்கு பொருத்தமாக இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close