கொய்யாவின் மருத்துவ பயன்கள்

  mayuran   | Last Modified : 07 Jan, 2017 12:37 pm
இன்றைக்கு விற்கிற விலையில் பழங்கள் சாப்பிடுவது எல்லாம் நமக்கு கட்டுபடியாகுமா? என்ற நினைப்பு பலருக்கும் வருவது இயல்பு. காரணம் டாக்டர்கள் நம்மிடம் பழங்கள் சாப்பிடச் சொல்லி பரிந்துரைத்தாலே, பலருக்கும் நினைவிற்கு வருவது ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவைதான். கொய்யாப் பழம், பப்பாளி போன்ற குறைந்த விலையில் எளிதாய் கிடைக்கும், பழங்களை பற்றிய நினைப்பு வருவதே இல்லை. இவற்றின் விலை தான் குறைவே தவிர, சத்துக்களில் எந்த குறையும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். நெல்லிக்காய்க்கு அடுத்து கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது கொய்யா. தொப்பையை குறைப்பதோடு, அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பத்திற்கு தீர்வளிக்கும். வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெரும். மினுமினுப்புக் கூடி, தோல் சுருக்கம் குறையும். கண் கோளாறுகள் விலகும். இது உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்ககூடியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close