மலசிக்கல் இருக்கா ? அப்போ இத படிங்க

  mayuran   | Last Modified : 11 Jan, 2017 11:27 am
நமது உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு பசியும் மற்றும் செரிமானமும் ஒழுங்காக இருக்க வேண்டும். நீங்கள் ‘கழிவறைக்கு’ நாள்தோறும் இரண்டு முறை சென்று நிம்மதியுடன் திரும்புபவராயிருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் அல்லது கழிவறையில் வெகு நேரம் காலம் கழிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள். வெது வெதுப்பான டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி நெய் கலந்து படுக்கைக்குப் போகும் முன்னர் அருந்துவது மலச்சிக்கல் பிரச்சனை தீர உதவும். அதேபோல, காலை நடை பயிற்சிக்கு முன்னர் 2-3 டம்ளர் வெது வெதுப்பான நீரை அருந்துவதும் சிறந்தது. ஒரு டம்ளர் குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு சிட்டிகை அளவு உப்பு கலந்து குடிப்பது எப்பேற்பட்ட மலச்சிக்கலையும் நீக்கிவிடும். பழவகைகள் மற்றும் காய்கறிகள் அதிலும் குறிப்பாக பப்பாளி, கொய்யா போன்றவற்றை உணவாக்கிக் கொள்வதும் சிறந்தது. தக்காளி, பீட்ரூட் துண்டுகள் மலச்சிக்கல் நீக்க பெரிதும் உதவும். தினந்தோறும் இரவு சாப்பாட்டிற்கு பின் நாட்டு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. இவை எல்லாமே இயற்கை சார்ந்த எளிய மருத்துவமுறைகள். ஆதலால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இவற்றை நாள்தோறும் கடைபிடித்தால் மலச்சிக்கல் நம்மை விட்டு விலகிவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close