பாட்டு கேட்கப் பிடிக்காதவரா நீங்க..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்த உலகத்துல இசைக்கு மயங்காத உயிர்களே இல்ல. அந்த இசை எங்க இருந்து வருது..? கத்துற குழந்தை கிட்ட இருக்கு இசை. குத்துற கொலைகாரன் கிட்ட இருக்கு இசை. இப்படி பல பரிமாணங்கள்ல இசை சுத்திகிட்டு திரியுது. நம்ம முன்னோர்கள் பாட்டு பாடியே மழை வர வச்சுருக்காங்க..இவ்ளோ ஏன்..பாட்டு பாடியே பசு மாட்டுல பால கறந்தவங்க தான் நம்ம ஆளுங்க. அப்படிப்பட்ட இசையை உங்களுக்கு கேட்கப் பிடிக்கலைன்னா..உங்க மூளைல பிரச்சினை இருக்குனு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நம்ம மூளையின் கார்டிக்கல், சப்- கார்டிக்கல் பகுதி சரியாக வளர்ச்சி அடைந்து, இரண்டுக்கும் சரியான தொடர்பு இருந்தால் மட்டுமே இசையை ரசிக்க முடியும் என நிரூபணமாகி உள்ளது. சரியான வளர்ச்சி இல்லாம இருக்கவங்களுக்கு இசையை கேட்கிற பொறுமை கூட இருக்காதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close