உங்க சாப்பாட்டுல உப்பு இருக்கா..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

"உப்பில்லாத பண்டம் குப்பையிலே" என்பது பழமொழி. ஆமாங்க, எவ்ளோ நல்லா சமைக்கத் தெரிஞ்ச ஆளா இருந்தாலும் சாப்பாட்டுல கடைசியா உப்பு போடுறப்போ, கை லைட்டா நடுங்கத் தான் செய்யும். அந்தளவுக்கு உப்பு ரொம்ப முக்கியமானது. அவ்ளோ முக்கியமா இருந்தாலும் அத அளவோட எடுத்துகிறது தான் உடலுக்கு ஆரோக்கியம். உலக சுகாதார நிறுவனம் சொல்ற கணக்குப்படி ஒரு ஆள் நாளுக்கு 5 கிராம் உப்பு தான் சேர்த்துக்கணுமாம். ஆனா, நம்ம இந்தியால இந்த அளவைத் தாண்டிப் போகுதாம். சராசரியா 10.9 கி உப்பு நம்ம உணவுல இருக்குதாம். அதிகபட்சமாக டெல்லி வாழ் மக்கள் 14.3 கிராமும், குறைந்த பட்சமா சென்னை மற்றும் பெங்களூரு வாழ் மக்கள் 9.38 கிராமும் ஒரு நாளுக்கு பயன்படுத்துறதா அறிக்கையில சொல்லியிருக்காங்க. ஊறுகாய், அப்பளம் இதெல்லாம் கொறச்சுக்க சொல்றாங்க. ஏன்னா, உடம்புல உப்பு சத்து அதிகமாகும் போது ரத்த அழுத்தம், இதய நோய், இரைப்பை புற்றுநோய், எலும்பின் வலு குறைவது மாதிரியான பிரச்சினைகள் வருதுனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. ஸோ..உங்க ஆரோக்கியத்த கவனிச்சுக்கோங்க..

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close