FOOD POISON: தவிர்ப்பது எப்படி..?

  jerome   | Last Modified : 12 Jan, 2017 08:29 pm

"உணவே மருந்து" என்ற அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருந்த நாம், இப்போது "மருந்தே உணவு" என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். அன்றாடம், நாம் சாப்பிடும் பொருட்கள் அனைத்தும் முழு அளவில் நமக்கு ஆரோக்கியம் கொடுக்கின்றதா என்பது சந்தேகமே. சாப்பிடும் உணவே நமக்கு விஷமாகி விடுவதற்கு பெயர் தான் FOOD POISON. இதை தவிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. 1. சீக்கிரம் கெட்டுவிடக் கூடிய உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜ்ஜில் வைத்து மறு நாள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். 2. மழை மற்றும் பனிக்காலங்களில் காற்றில் நிலவும் ஈரப்பதத்தால் அரிசி, பருப்பு போன்ற மாளிகைப் பொருட்களில் பூஞ்சைகள் உருவாக வாய்ப்பு அதிகம். அப்படி ஏற்பட்டுவிட்டால், அதை வெயிலில் காய வைத்து மீண்டும் பயன்படுத்தக் கூடாது. 3. கடைகளில் வாங்கும் எண்ணெய் பொருட்களை அவற்றின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்கவும். 4. முடிந்தவரை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய உணவுப் பொருட்களை வீட்டிலேயே தயார் செய்தால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். முடிந்த வரை, சற்று விழிப்புணர்வோடு இருந்தால் உடல் நலத்தை பேணி காக்க முடியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close