இரத்தத்தில் உள்ள சிகரெட் நிக்கோட்டினை வெளியேற்றும் எளிய உணவுகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதை, உடனடியாக நிறுத்தும் போது பார்வைக் குறைபாடு, அதிகமாக கோபப்படுதல், மனச்சோர்வு போன்ற பாதிப்புக்கு ஆளாகின்றனர். புகை பிடிக்கும் பழக்கத்தினை படிப்படியாகக் குறைப்பது தான் சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், இரத்தத்தில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற சில உணவுப்பொருட்களை சாப்பிட்டாலே போதும் என்கின்றனர். 1. கேரட் ஜூஸ் : கேரட் ஜூஸ் - ல் உள்ள வைட்டமின் ஏ, பி, கே போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவியாக உள்ளது. 2. புரோக்கோலி : நிக்கோட்டின் உடலிற்குத் தேவையான வைட்டமின்களை எளிதில் அழித்துவிடும். புரோக்கோலியில் உள்ள வைட்டமின் பி5 மற்றும் சி இழந்த வைட்டமின்களை ஈடு செய்து விடும். 3. ஆரஞ்சு ஜூஸ்: ஆரஞ்சு ஜூஸ் சாப்பிடுவதால் புகை பிடிக்கும் எண்ணமே வராது என மருத்துவர்கள் உறுதியாக கூறுகின்றனர். 4. தண்ணீர்: நாள் ஒன்றுக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதனால் நம் உடலில் நிக்கோட்டின் உட்பட அனைத்து விதமான நச்சுக்களும் வெளியேற்றப் படுகின்றதாம். உங்களுக்கும், உங்களைச் சுற்றி உள்ளவர்களும் கேடு தரும் சிகரெட்டை விட்டுவிட கொஞ்சம் முயற்சி பண்ணுங்க பாஸ்..முடியும்..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close