தினமும் குளிக்கிறவரா நீங்க..? அப்ப, நீங்க தான் இத ஃபர்ஸ்ட் படிக்கணும்..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்னைக்கு இருக்க தண்ணி கஷ்டத்துல, தினமும் குளிக்கிறதே பெரிய பிரச்சினை தான். இருந்தாலும், நம்ம ஆளுங்க தான் சுத்தத்தின் மறுபிறப்பு ஆச்சே..! குளிக்காம சாப்பிட மாட்டேன்..குளிக்காம பேச மாட்டேன்..குளிக்காம யாரையும் பார்க்க கூட மாட்டேன்னு குளிக்கிறதுக்கு ஒரு கிராம்மரே வச்சுருப்பாங்க. இப்ப நம்ம மேட்டர்.. நீங்க குளிக்கிறீங்களா? இல்லையா? - ங்கிறது இல்ல.. எந்த தண்ணியில குளிக்கிறீங்க. "பச்ச தண்ணியா? சுடு தண்ணியா?" "எதுல குளிச்சா என்னென்ன நன்மைகள் இருக்கு?". குளிர் நீர் குளியல் பிரியர்களுக்கு : * காலையில குளு,குளுனு தண்ணிய எடுத்து உச்சந்தலையில ஊத்துறதுனால, உடம்புல உள்ள நரம்பெல்லாம் 'சிலிர்த்து' மூளை ஸ்பீடா வேலை செய்யுமாம். * நம்ம இரத்தத்துல உள்ள லிம்போசைட்ஸ் - ன்ற கிருமியை அழிச்சு, நோய் வராம பாதுகாத்துக்கலாம். * உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை ரிமூவ் பண்றதால, ஆயுள் முடியுற வரைக்கும் ஆரோக்கியமா இருக்கலாம். * இயற்கையாகவே நம்ம தலையில ஒரு எண்ணெய் சுரக்குமாம். "ஜில்லு" தண்ணியில குளிச்சா இந்த எண்ணெய் எப்பவும் போல சுரந்து வழுக்கை விழாம, 'மண்ட பத்திரமா' இருக்குமாம். சுடு நீர் குளியல் பிரியர்களுக்கு : * மழைக்காலத்துல "ஜம்முனு" ஒரு ஹாட் பாத் எடுக்கிறது தாங்க பெஸ்ட். ஏற்கனவே, மழைதண்ணியில நனஞ்சுருந்தா அதுல கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்கும். ஸோ, அத அழிக்க, உடம்புல சூடா தண்ணி படுறது தான் நல்லது. * சுடு நீர்ல குளிக்கிறதுனால, நம்ம தோல்ல இருக்கிற, கண்ணுக்குத் தெரியாத குட்டி,குட்டி ஓட்டைகள்ல இருக்க அடைப்பை நீக்கி உடலை ரொம்ப சுத்தமா வச்சுக்கலாம். * "மைக்ரேன்" னு சொல்லப் படக்கூடிய ஒருபக்கத் தலைவலி "டெம்ப்ரவரி" ஆக சரி ஆகுமாம். * ஈவ்னிங் டைம் எடுக்கிற 'ஹாட் பாத்' னால, தசை நார்கள் எல்லாம் தளர்வாகி, பாடி ரிலாக்ஸா ஃபீல் ஆகுமாம். அதனால, ராத்தூக்கம் கும்முனு வருமாம். ஆகவே, நண்பர்களே..! நாம எப்படி குளிக்கிறோங்கிறது மேட்டர் இல்ல..குளிக்கிறோமா..? அது தான் மேட்டர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.