நகம் பார்த்து நோய் சொல்லும் மருத்துவம்

  jerome   | Last Modified : 31 Jan, 2017 05:42 pm
நம் விரல் நுனிகளுக்கு வலு சேர்க்கும் நகங்களை வைத்து நம்முடைய தேக ஆரோக்கியத்தை அளவிட முடியுமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும். நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள். நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது. விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம். விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிக்கோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள். கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு. கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகளும், வரிகளும் அதிகமாக இருந்தால் வாயுத் தொல்லை இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்குமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close