இப்போ இருக்குற நவநாகரிக உலகத்துல ஒரு முடி வெள்ளையானா கூட மனசு உடைஞ்சி புலம்பி தள்ளுற இளைஞர்கள் ஒரு பக்கம்னா, 10, 15 வயசு குழந்தைங்களுக்கு கூட இந்த இள நரை பிரச்சனை தலவிரிச்சி ஆடுது. வெள்ளை முடியை கறுப்பாக்க என்னன்னவோ வித்தைகளை கையாண்டாலும் மனசுல ஓரத்துல வலி இருக்க தான செய்யுது. சரி,உங்க முடி ஏன் வெள்ளையாகுதுன்னு சொல்லுறேன் நல்லா கவனீங்க...
நம்ம முடியோட நிறம் மெலனின் உற்பத்தியைப் பொறுத்து தான் இருக்கு. அது தான் சிலருக்கு முடி கறுப்பு கலர்லயும், சிலருக்கு பழுப்பு கலர்லயும் இருக்க காரணம். நமக்கு வயசாக, வயசாக மெலனின் கொறஞ்சி முடியை சாம்பல் நிறத்துலயும், வெள்ளை நிறத்துலயும் மாத்திடுது.
ஒருவேளை நீங்க சரியா சாப்பிடாம ஊட்டச்சத்து பிரச்சனை இருந்தாலும், இல்ல ஓவரா ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு கப்பல் கவுந்த மாதிரி கவலையா இருந்தாலும் இந்த ப்ராப்பிளம் ஈஸியா உங்கள அட்டாக் பண்ணிடுங்கோ..
இந்த பிரச்சனை தான், உங்களுக்கு தல போற பிரச்சினையா இருக்குதுனா, ஒரு நல்ல 'ட்ரைக்காலஜிஸ்ட்டை' போய் பாருங்க தப்பே இல்ல.. உங்க அழக இன்னும் ஜொலிக்க வைங்க...!