நீங்க சாப்பிடுற தேன் ஒரிஜினலா இல்ல டுப்ளிகேட்டா? எப்படி கண்டுபிடிப்பது ?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் தேன்.தேனில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட, சுவாசக்கோளாறு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தீப்புண், விக்கல் போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது. இத்தகைய மருத்துவ குணங்களை கொண்ட தேன் சுத்தமான அசல் தேனா? அல்லது கலப்படமா? எப்படி அறிவது. (1) கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் அது அசல் தேன். (2) சுத்தமான அசல் தேன் எவ்வளவு நாள் இருந்தாலும் அதில் எறும்பு மொய்க்காது. (3) ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் அது அசல் தேன். மேலும், பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். (4) சிறிது தொட்டு நாவில் வைத்து சுவைத்தால் தித்திப்பு நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்த பின் மஞ்சள், சிவப்பு என்று எந்த வண்ணமும் நாவில் ஒட்டியிருக்காது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்னும் சொல்லிற்கேற்ப அளவோடு தேனை உண்டு ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close