இது தாங்க குழந்தைகளுக்குத் தேவை...!

  jerome   | Last Modified : 02 Feb, 2017 03:30 pm
"அடுத்த தலைமுறைக்கு நம்ம என்ன கொடுக்கப் போறோம்?", இந்தக் கேள்வியை நமக்குள்ளேயே ஒரு தடவை கேட்டுப் பார்த்தா போதும், நம்ம எந்த நிலைமையில இருக்கோம்னு புரிஞ்சுடும். அந்த அளவுக்கு ஒரு அர்த்தமில்லாத வாழக்கையைத் தான் வாழ்ந்துட்டு இருக்கோம். சின்ன வயசுல, நம்முடைய பெற்றோர்கள் நமக்கு கொடுத்த ஆரோக்கியமான, அறிவுப்பூர்வமான ஒரு வாழ்க்கையை நம் குழந்தைகளுக்கு கொடுக்கத் தவறிக்கிட்டு இருக்கோம். பாரதி பாடி வச்சுட்டுப் போன "ஓடி விளையாடு பாப்பா", "உடலினை உறுதி செய்" போன்ற ஹெல்த் டிப்ஸ்லாம், இன்னைக்கு பரீட்சைல மார்க் வாங்குறதுக்காக செய்யுள் பகுதிகள்ல தான் பயன்படுது. நெஜமாவே, இன்றைய குழந்தைகளின் நிலைமை பரிதாபமா தான் இருக்கு. புறாக் கூடு மாதிரி கட்டிவச்சிருக்க அப்பார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளேயே குழந்தைப் பட்டாம்பூச்சிகளின் சிறகுகள் சிறைபட்டு விடுகின்றன. குழந்தைகள் ஒன்னா சேர்ந்து ஓடி, ஆடி விளையாடறதால மனதளவிலும், உடலளவிலும் நிறைய நன்மைகள் இருப்பதாக உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் கூறுகின்றார். * ஓடியாடி விளையாடுவதால் உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி சீராக இருப்பதோடு அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படும். * விளையாட்டின்போது அதிகளவில் ஆக்ஸிஜன் மூளைக்கு செல்வதால், நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதனால் படிப்பில் கவனம், மெமரி பவர் அதிகரிக்கும். * விளையாடுவதால் பசி எடுக்கும். நாம் கேட்காமல்.. கெஞ்சாமல் உணவு தானாக உள்ளே போகும். * உடலில் உள்ள கழிவு உப்புக்கள் வியர்வையாக வெளியேறும். அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. * சேர்ந்து விளையாடுவதால் மனிதநேயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், நட்புணர்வும் வளரும். * விளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், விட்டு கொடுக்கும் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிகை, புதுமையான செயல் திறன்கள் வளரும். * எப்படி ஒரு பிரச்சினையை கையாள வேண்டும், என்ன செய்தால் இந்த சிக்கலான பாதையில் இருந்து வெளி வரலாம் என்கிற எண்ணங்கள் தோன்றும். அந்த பலன் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். உங்க இடத்துல இருந்து குழந்தைகளைப் பற்றி யோசிக்காம, கொஞ்சம் குழந்தையா மாறி யோசிச்சுப் பாருங்க.. அவங்க, கனவுகள் உங்களுக்குப் புரியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close