மேக்-அப் போடும் அழகு பெண்களுக்கு சில அறிவுரைகள்...

  jerome   | Last Modified : 02 Feb, 2017 06:42 pm
முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு சாதனப் பொருட்கள் வாங்க நிறைய செலவு செய்யும் நாம், அவற்றை சரியான அளவில் சரியான முறைப்படி பயன்படுத்துகிறோமா என்பதுதான் இங்கே கேள்வி. தேவைக்கும் அதிகமாக காஸ்மெடிக் அயிட்டங்களை அப்ளை செய்யும்போது, அவை என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கியுள்ளார் சரும சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆர்த்தி. * எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என சருமத்தின் தன்மையைப் பொறுத்து அதற்கேற்ற அழகுச் சாதனப் பொருட்களை பயன்படுத்தாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள், வெண் திட்டுகள் வரக்கூடும். * முகப்பரு, சரும அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை செய்யும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. இல்லாவிட்டால் பருக்கள் முகம் முழுவதும் பரவலாம். * மேக்அப் எவ்வளவு நேரம் முகத்தில் இருக்கலாம் என்பது பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்களின் தரத்தைப் பொறுத்து அமையும். பொதுவாக, முகத்தில் நீண்ட நேரம் மேக்அப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டாம். சருமத் துவாரங்கள் அதனால் தொடர்ந்து அடைபட நேர்வதால், சருமம் தன் இயல்பையும் பொலிவையும் இழந்துவிடும். * சருமத்துக்கு பொருந்தாத நிறங்களை முகப்பூச்சாக தேர்வு செய்ய வேண்டாம். அது பார்ப்பதற்கு உங்கள் முகத்தை உடலில் இருந்து தனித்து காட்டுவதுடன், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். இதையெல்லாம் விட முக்கியம் முகப்பூச்சுகளை ரிமூவ் பண்ணுவது. மேக் அப் போட எடுத்துக்கொள்ளும் அதே சிரத்தையை ரிமூவ் பண்ணும்போதும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் ஃபாலோ பண்ணி உங்க சருமத்தை பத்திரமா பார்த்துக்கோங்க அழகுப் பெண்களே..!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close