ஒரே இரவில் வயதான தோற்றம்: ஏன்? எப்படி? மருத்துவரின் விளக்கம்

  gobinath   | Last Modified : 07 Feb, 2017 10:21 am
இரவில் தூங்கப் போவதற்கு முன்பாக நேர்மறையான சிந்தனைகள் இருந்தால் நல்ல தூக்கம் வராது என்று சொல்லி கேட்டிருக்கிறோம். இந்த நிலையில், ஒருவர் அதிகளவு மன அழுத்தத்துடன் தூங்கினால், ஒரே இரவில் அவர் வயதாக கூடும் என ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக நோபல் பரிசு பெற்ற உயிரியல் நிபுணர் டாக்டர் எலிசபெத் பிளாக்பேன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, அதிகளவு மன அழுத்தம் ஏற்படும் போது, மன அழுத்த ஹார்மோன்களுக்கு எதிராக நம் உடலானது போராடும். குறிப்பாக நாம் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றால், அல்லது நமக்கு நரை ஏற்படாமல் நமது தலைமுடி கருமையாகவே இருக்க வேண்டும் என்றால், நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் புத்துணர்ச்சி பெற வேண்டும். ஆனால், நாம் அதிகளவு மன அழுத்தத்தில் இருக்கும் போது உண்டாகும் மாற்றங்கள் காரணமாக செல்களின் புத்துணர்ச்சி தடைப்படுகிறது. இதன் காரணமாகத்தான் மன அழுத்தத்தில் இருக்கும் போது, நாம் வயதான தோற்றத்தை இலகுவில் பெற்றுவிடுகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close