சரும வறட்சிக்கான காரணங்கள்....!

  jerome   | Last Modified : 08 Feb, 2017 02:50 am
சரும வறட்சியை போக்குவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்குப் புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்குப் பரம்பரை காரணங்களாலும் ஏற்படுகின்றது. இதை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்டச் சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும். உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும், மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும். அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது. தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதும் சரும வறட்சியை ஏற்படுத்துகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close