சிறுநீரகத்தைப் பாதுகாக்க மருத்துவர்களின் 8 எளிய டிப்ஸ்கள்

  jerome   | Last Modified : 08 Feb, 2017 09:39 pm
அவசர, அவசரமென ஓடிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில், நம் உடலுக்கு அன்றாடம் தேவையான நீரைக் குடிப்பது குறைந்து விட்டது. இதுபோக, கார்பனேட் கலந்த குளிர் பானங்கள், மதுபானங்கள் போன்றவற்றை அருந்துவதால் நம் சிறுநீரகம் தான் முதலில் பாதிக்கப் படுகின்றது. அதனை எளிய முறையில் பராமரித்துக் கொள்ள மருத்துவர்கள் தரும் டிப்ஸ் கீழே.... 1. உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரியுங்கள். 2. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உயராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 3. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள். 4. புகைப் பிடிக்காதீர்கள். 5. பொட்டாசியம் அல்லது உப்பு அதிகமாகக் கலந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள். 6. போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். 7. தினசரி முறையான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யுங்கள். 8. சுயமருத்துவம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இதையெல்லாம் தவறாமல் செய்து சிறுநீரகத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close