வெயிலினால் ஏற்படும் உடல் சூட்டையும், சருமத்தையும் பாதுகாக்க சில டிப்ஸ்:

  shriram   | Last Modified : 09 Feb, 2017 02:30 pm
கோடை வெயில் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில்; இப்பொழுதே வெப்பம் நம்மை உண்டு இல்லை என செய்கிறது. இந்த சூட்டில் இருந்து நாம் தப்பிக்க சில குறிப்புக்கள்: # வெயிலில் அலைந்துவிட்டு வீடு திரும்பியதும் முகத்தைச் சுத்தமான துணியால் துடைத்துவிட்டுக் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். # வெயிலால் முகத்தில் படரும் கருமையைப் போக்க, 2 டீஸ்பூன் தயிரில் சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். # நிழலில் காயவைத்த ஆவாரம் பூவுடன் சம அளவு பயத்தமாவைச் சேர்த்துத் தினமும் உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் நீங்கும். # பச்சைப் பயறுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து, அதைத் தண்ணீரில் குழைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம், வியர்க்குரு, உடலில் உப்பு பூத்தல் போன்றவை நீங்கும். # வெயிலில் அலையும்போது நாக்கு வறண்டு தாகம் எடுக்கும். அதைத் தடுக்கச் சிறிதளவு கல்கண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம். # குடிப்பதற்கு மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைக்கும்போது அதனுடன் சிறிதளவு துளசியைப் போட்டு வைத்தால் சளிப் பிடிக்காது. # கோடை காலத்தில் உணவில் புளிப்பு, காரம் இரண்டையும் குறைவாகச் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. # ஜூஸ் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்க்கலாம். # இளநீர் அல்லது தண்ணீருடன் வெந்தயப் பொடியைச் சேர்த்துக் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும். # 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியுடன் அரைக் கப் தயிர் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close