கர்ப்பமான காலத்தில் உறவு வைக்கலாம் ?

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பொதுவாக மனைவி கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு வைத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கு எழுவதுண்டு. அவ்வாறு கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என பலரும் கருதி தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகின்றனர். ஆண்கள் வேறு வழிகளையும் தேடிச் செல்கின்றனர். கர்ப்ப காலத்தில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவோர் சில விஷயங்களை நினைவில் கொள்வது நல்லது. மனைவி ஆரோக்கியமான உடல்நிலையில், கருப்பை தொடர்பான கோளாறுகள் ஏதுமின்றி, உறவு வைத்துக்கொள்வதில் விருப்பமும் இருந்தால் கடைசி மாதம் வரை உறவு கொள்ளலாம். எட்டு மாதங்கள் வரை தாராளமாக உறவு கொள்ளும் தம்பதியர் அதற்குப் பிறகு அதை நிறுத்திவிட்டால் நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் ஒன்பதாவது மாதத்துக்குப் பிறகாவது அதைத் தவிர்ப்பது சிறந்து. ஆனால் கர்ப்ப காலத்தில் முழுமையாக உறவை தவிர்ப்பதும் சிறந்ததே என மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மனஉளைச்சல் அதிகமாக இருந்தால் உறவு வைத்துக் கொள்வதில் பெரிதாக விருப்பம் இருக்காது. இந்நிலையில் உங்க மனைவி இருப்பதாக அறிந்தால் கட்டாயப்படுத்தி உறவு மேற்கொள்வது குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close