• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

வீட்டில் உள்ள பல்லிகளை விரட்ட சில டிப்ஸ்..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பெரும்பாலான வீடுகளில் பல்லிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். பலருக்கு பல்லி என்றாலே அலர்ஜி தான். அவற்றை விரட்டுவதற்கு சில எளிய வழிமுறைகளை செய்தாலே போதுமானது. சிறிது காபித்தூளை மூக்குப் பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பல்குத்தும் குச்சிகளின் முனையில் குத்தி, பல்லிகள் வரும் இடங்களில் வைத்தால், இவற்றை உண்ணும் பல்லிகள் செத்துவிடும். மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். ஏனென்றால், பல்லிதான் மயிலுக்கு பிடித்த உணவு. பல்லிகள் நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் இறகை ஒட்டி வைத்தால், பயத்தில் பல்லிகள் ஓடிவிடும். மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து கொண்டு ஒரு பூச்சிக் கொல்லி மருந்து போல சமையலறையில் உள்ள அலமாரிகள், டியூப்லைட் இடுக்குகள், அடுப்புகளுக்கு அடிப்புறம் மற்றும் ஃப்ரிட்ஜ் அடிப்புறம் ஆகியவற்றில் இக்கலவையைத் தெளித்தால், இந்த வாசனையின் எரிச்சலால் பல்லிகள் இருக்காது. முழுதாகக் காட்சியளிக்கும் கோழி முட்டை ஓடுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் போட்டால், வீட்டுக்குள் வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி பல்லிகள் வராது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close