கரு வளையத்தை உண்டாக்கும் மொபைல் போன்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பல மணி நேரம் மெய்மறந்து செல்போனில் இருப்பதால் தூக்கம் பாதிக்கப்படுவதுடன், செல்போனின் தொடர்ந்த வெளிச்சத்தால் கண்கள் சோர்வடைகின்றன. தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம் இதெல்லாம் கருவளையம் உருவாக காரணமாகின்றன. புகைப்பழக்கம், மது, குளிர்பானங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்வதாலும் கருவளையம் உண்டாக அதிக வாய்ப்பிருப்பதாக அழகுக் கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் தாக்கத்தை குறைப்பதற்காக, தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழாக தடவி சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் கருவளையம் குறையுமாம்.மேலும், தண்ணீர் நிறைய குடிப்பது முகப்பொலிவைக் கொடுக்கும் என்று அழகுக் கலை நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் மற்றும் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் டெக்னாலஜியைத் தேவையில்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் கருவளையத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close