• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

உங்க பேங்க் பேலன்ஸை காப்பாற்ற சில சித்த மருத்துவக் குறிப்புகள்..!

Last Modified : 14 Feb, 2017 04:04 pm

நவீன வாழ்க்கை முறையில், சிறு உடல் பிரச்சனை என்றால் கூட டாக்டர்-ஐ போய் பார்த்து ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு பணத்தை விரயம் செய்கிறோம். அவ்வாறு இல்லாமல் நம் வீட்டில் உள்ள உணவைக் கொண்டு நிவர்த்தி செய்வதற்கான சில எளிமையான சித்து மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம். அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும். வாயுத்தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். மலச்சிக்கல்: செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். மூச்சுப்பிடிப்பு: கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சாதம் வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். சருமநோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும். தேமல்: வெள்ளை பூண்டை, வெற்றிலையுடன் சேர்த்து மையாக அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். மூக்கடைப்பு: ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். இதயெல்லாம், முடிஞ்சா ஃபாலோ பண்ணி உங்க பேங்க் பேலன்ஸை காப்பாத்திக்கோங்க..

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close