சரும வறட்சியா அப்போ இத செய்யாதீங்க...!!

Last Modified : 15 Feb, 2017 05:54 pm
பொதுவாகவே வறண்ட சருமம் கொண்டவர்கள், அதனை சரி செய்ய வெறும் மாய்ஸ்சுரைசர் அல்லது ஜெல் வடிவ க்ரீம்களைப் பயன்படுத்துவோம். அப்படி என்ன தான் விலை அதிகமான காஸ்மெடிக்ஸ் பொருட்களை அல்லது மூலிகை கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினாலும், நாள் முடிவதற்குள் சருமம் மீண்டும் வறட்சி அடைந்துவிடுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு அளவுக்கு அதிகமான சரும வறட்சி உள்ளதென்று அர்த்தம். அத்தகையவர்கள் அன்றாடம் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. # வறட்சியான சருமம் கொண்டவர்கள், அடிக்கடி முகத்தைக் கழுவக் கூடாது. குறிப்பாக சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இது வறட்சியை இன்னும் அதிகரிக்கக்கூடும். எனவே அளவுக்கு அதிகமான சரும வறட்சியைக் கொண்டவர்கள், ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் முகத்தை கழுவக்கூடாது # அமிலம் மற்றும் pH (அமில காரத்தன்மை) அளவு அதிகமாக இருக்கும் சோப்புக்களைப் பயன்படுத்தக்கூடாது. வேண்டுமானால் கிளிசரின் கொண்ட சோப்புக்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது சருமத்தை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். # சூடான நீரில் குளிக்கக்கூடாது. அப்படி குளித்தால், அது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை முற்றிலும் வெளியேற்றி, சரும வறட்சியை அதிகரிக்கும். எனவே குளிர்ந்த அல்ல வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வேண்டும். # வறட்சியான சருமம் கொண்ட ஆண்கள் ஆஃப்டர் ஷேவ் லோஷனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக pH அளவு அதிகம் கொண்ட லோஷனைப் பயன்படுத்தவே கூடாது. வேண்டுமானால் pH குறைவாக உள்ள மற்றும் கிளிசரின் அல்லது கற்றாழை ஜெல் கொண்ட லோஷனைப் பயன்படுத்தலாம். # டோனர்களும் சருமத்தை மேலும் வறட்சியடையச் செய்யும். எனவே வறட்சியான சருமம் உள்ளவர்கள் டோனரை தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். # சருமம் அதிகம் வறட்சியடைவதற்கு போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருப்பதும் ஓர் காரணம். எனவே வறட்சியான சருமம் உள்ளவர்கள், தினமும் தவறாமல் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியம். செய்வீர்களா....?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close