எடை குறைவாக பிறந்த குழந்தையை சரியாக கவனிக்க சில டிப்ஸ்...

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்றைய உலகில் எல்லாமே பேஷன் தான், நம்ம போடுற டிரெஸில் இருந்து சாப்பிடுற சாப்பாடு வரைக்கும் பேஷன் மாயம் தான். சத்தான உணவை சாப்பிடுவதை விட ஸ்டைலான சாப்பிட தான் விரும்புறோம். அதன் விளைவு உலகில் பிறக்கும் குழந்தைகள் பலர் எடை குறைவுடன் பிறப்பது. அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்யெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் நோய் தொற்று ஏற்படுகிறது. சரி, இப்போது அப்படி எடை குறைவாக பிறந்த குழந்தையை சரியாக கவனிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம். # குறைவான எடையில் பிறந்த குழந்தைக்கு அந்த குழந்தைக்கு உடலில் போதிய சத்துக்கள் இருக்காது அதனால் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். # உருவில் சிறியதாக இருப்பதால், இவர்களை மிகவும் கவனமாக தூக்க வேண்டும். முக்கியமாக தலையை மிகவும் கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும். # இவர்கள் தூங்கும் போது SIDS (Sudden Infant Death Syndrome) என்னும் திடீரென குழந்தை இறப்பு நோய்த்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், பெற்றோர்கள் குழந்தையை தங்களது வயிற்றில் தூங்க வைக்க கூடாது. # இக்குழந்தை இருக்கும் இடங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த குழந்தைகளுக்கு நோய்களானது எளிதில் தாக்கக்கூடும். எனவே குழந்தையை சுற்றியுள்ள இடத்தை மட்டுமின்றி, குழந்தையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். # சளி, இருமல் போன்ற பிரச்சனை உள்ள மனிதர்களை குழந்தைக்கு அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம். ஏனெனில், எளிதில் நோய் தொற்று ஏற்பட்டு குழந்தையை பாடாய் படுத்திவிடும். # குழந்தைகளுக்கு வைட்டமின்கள், இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம் போன்ற பல டானிக்குகளை மருத்துவரிடம் கேட்டு வாங்கி, அதனைக் கொடுத்து, குழந்தைகளின் எடையை அதிகரிக்க வேண்டும். # குறிப்பாக குழந்தையின் எடை சரியான அளவில் வரும் வரை, பெற்றோர்களைத் தவிர வேறு யாரையும் குழந்தையை தூக்க அனுமதிக்க வேண்டாம். இதை பின்பற்றி உங்கள் குழந்தையை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து அனைவருக்கும் உதவிடுங்கள்....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close