"வொர்க் ப்ரம் ஹோம்" பண்ணா பூட்ட கேஸ் ஆய்ருவீங்க! - UN ஆய்வு

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் "work from home" என்னும் சவுகரியம், சில தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் வேலைகளில் நிலவுகிறது. கேட்பதற்கே ஜாலியாக இருக்கும் இந்த வேலை செய்யும் முறைகுறித்து, ஐக்கிய நாடுகளின் ஒரு பிரிவினர் இந்தியா உட்பட 15 நாடுகளில் ஆய்வு நடத்தினர். அதில், இம்முறையினால் வேலையை மிகவும் சிறப்பாக செய்ய முடிகிறது, போக்குவரத்துக்கான நேரம் மிச்சமாகிறது, வேலை சார்ந்த வாழ்க்கைமுறை சிறப்பாக இருக்கிறது என்பது முதலிய நிறுவனத்திற்குச் சாதகமான பட்டியல் நீள்கிறது. ஆனால், அவ்வாறு வீட்டில் வேலை செய்பவர்களுக்கு இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது, வேலை செய்யும் நேரம் நீள்கிறது, தூங்கும் முறை பாதிக்கப் படுகிறது, அவர்களின் சுய வாழ்க்கைக்கு நேரம் கிடைப்பதில்லை என்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் பணியாளர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இனிமே உங்க ஆப்பீஸக் குறை சொல்லுவீங்க?!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close