முகம் பளிச்சென்று மாற சில டிப்ஸ்

  mayuran   | Last Modified : 17 Feb, 2017 09:22 pm
தற்போது உள்ள இயந்திர வாழ்க்கையில் நம் உடலினை பராமரிப்பதற்காக பல ரசாயனங்கள் கலந்த பொருட்களைப் பயன்படுத்துகிறோம். அதைவிடுத்து நம் வீட்டிலேயே கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு முகத்தை அழகாகவும், உடலைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள இதோ சில டிப்ஸ். *தினமும் பாலில் தேவையான அளவிற்குத் தேன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடல் பொலிவு பெறும். அத்திப்பழத்தை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளமையான தோற்றத்தைப் பெறலாம். *முகச்சுருக்கத்தை போக்குவதற்கு மஞ்சள் தூளுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து முகத்திற்குத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவினாலே போதும். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் இன்னும் சிறந்தது. *பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் முகம் பளிச்சென்று இருக்கும். சோப்பு போடுவதை விட இது சிறந்த பலனைக் கொடுக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close